ரஷ்ய தாக்குதலில் 2 பேர் பலி: 20 மாதமாக தொடரும் உக்ரைன் போர்

கீவ்: ரஷ்ய ராணுவம் நேற்று உக்ரைன் கிராம பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதில் 2 பேர் பலியானதுடன், 3 பேர் படுகாயம் அடைந்தனர். உலக அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரஷ்யா-உக்ரைன் போர் 20 மாதங்களாக நடக்கிறது. ஒவ்வொரு நாளும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபடுவதால் ராணுவத்தினர் உள்பட அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

நேற்று ரஷ்யா படையினர், உக்ரைன் தெற்கு மாகாணம் கெர்சன் பகுதியில் உள்ள பெரிஸ்லாவ் கிராம வீடுகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு பெண் பலியானதுடன், போலீஸ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அத்துடன், வோவ் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் இறந்ததாகவும் கெர்சன் கவர்னர் அலெக்சான்டர் புரோகுடின் தெரிவித்தார்.

உக்ரைன் தரப்பு நேற்று ரஷ்யாவின் குர்ஸ்க் நகரில் உள்ள முக்கிய பாதுகாப்பு அமைப்பான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் கிளை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

The post ரஷ்ய தாக்குதலில் 2 பேர் பலி: 20 மாதமாக தொடரும் உக்ரைன் போர் appeared first on Dinakaran.

Related Stories: