அண்ணாவை பற்றி விமர்சித்தது தவறு: அண்ணாமலைக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: பாஜவுடனான அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பாஜ தலைவர் நட்டாவை சந்தித்து என்ன பேசவேண்டுமோ அதை பேசிவிட்டனர். அண்ணாவை பற்றி பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது தவறு.

மறைந்த அண்ணாவை போன்ற தேசிய தலைவர்களை பற்றி யார் விமர்சனம் செய்தாலும் தவறு. இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான குழுவை முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தேர்தல் மூலம் செலவுகள் குறையும். அதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாவை பற்றி விமர்சித்தது தவறு: அண்ணாமலைக்கு ஜி.கே.வாசன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: