2வது சீசனை அலங்கரிக்க ஐந்தாயிரம் தொட்டிகளில் அலங்கார தாவரங்கள் தயார்

 

ஊட்டி,செப்.24: ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இருந்த போதிலும் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு சீசனின் போதும் தாவரவியல் பூங்காவில் புதிதாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல் பல்லாயிரம் மலர் தொட்டிகளில் புதிதாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இரண்டாம் சீசனுக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டது. அதேபோல் 20 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான அலங்கார தாவரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த அலங்கார செடிகள் தயார் நிலையில் உள்ளதால், அவைகளை மாடங்களிலும் மற்றும் சிறிய புல் மைதானத்திலும் அலங்கரித்து வைப்பதற்காக நர்சரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மாடங்களில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படும் போது இது தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

The post 2வது சீசனை அலங்கரிக்க ஐந்தாயிரம் தொட்டிகளில் அலங்கார தாவரங்கள் தயார் appeared first on Dinakaran.

Related Stories: