திருவள்ளூர்: புண்ணியம் நிறைந்ததும் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அதுவும் முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசிப்பது அவ்வளவு பலன்களை அள்ளிக்கொடுக்கும் என்பது ஐதீகம். இதன்காரணமாகவாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களையும் பெற நினைப்பவர்கள் இந்த புரட்டாசி முதல் சனிக்கிழமைபெருமாளை தரிசிப்பார்கள். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால், சனி பகவானால் ஏற்படக்கூடிய வீரியம் குறையும், சங்கடங்கள்அகலும். ஒவ்வொரு வாரமும் ஆலயத்தில் பெருமாளை வழிபாடு செய்துவிட்டு வீட்டுக்கு வந்து பெருமாளுக்கு புளியோதரை அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பதும் ஐதீகம்.
இதன்படி, இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள்கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சிசம்பத், மக்கள்தொடர்பு அலுவலர்எஸ்.சம்பத் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
The post இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.
