அரசு பள்ளிகளில் படித்து, மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளோருக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி: 10 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் படித்து, மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளோருக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மருத்துவக்கல்லூரிகளில் 10 சதவீதம் தரப்பட்டது. அரசு பள்ளியில் படித்து இடம் கிடைத்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி கட்டணம் சிரமமாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

அரசு பள்ளியில் படித்து வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசானது, அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும். கல்லூரிகளில் அந்த இடத்துக்கான கட்டணத்தை கல்லூரிகள் கேட்க வேண்டாம். கர்நாடக காவிரி தண்ணீரை தரமறுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உரிய காவிரி தண்ணீர் கிடைக்கும் வகையில் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.

 

The post அரசு பள்ளிகளில் படித்து, மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளோருக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: