உரமிடும் பணியில் விவசாயிகள் பாலக்காட்டில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

பாலக்காடு, செப்.21: பாலக்காடு, சித்தூர் தேவாங்கபுரத்தில் அமைந்துள்ள உற்சவ கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விழா கொடியேற்றமும் நடைபெற்றது. சித்தூர் சோகநாஷினி நதியிலிருந்து தீர்த்தக்கும்பம் செண்டை வாத்யத்துடன் நிகழ்ச்சி நடந்தது.

இதனையடுத்து மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜை, பூசாரி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மதியம் உச்சிக்கால பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலை 5 மணிக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பக்தர்கள் கனிகள், அவில், மலர் பணியாரங்கள் ஆகியன வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து செண்டை வாத்யம், நையாண்டி மேளம், நாதஸ்வரம் ஆகிய வாத்ய கோஷங்களுடன் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. தேவாங்கபுரம், தெலுங்கு வீதி, கடைவீதி வழியாக சென்று சித்தூர் சோகநாஷினி நதியில் விநாயகர் சிலைவிசர்ஜனம் நடந்தது. தொடர்ந்து இரவு தீபாராதணை பூஜைகள், பிரசாத விநியோகம் ஆகியவை நடக்கிறது.

அதேபோல் பாலக்காடு சித்தூர் வடக்கந்தரை அரசமரத்தடி விநாயகர் கோயில் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post உரமிடும் பணியில் விவசாயிகள் பாலக்காட்டில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: