கூடலூர், பந்தலூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

 

கூடலூர், செப்.20: கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 28 சிலைகளும், நியூஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 28 சிலைகளும் தேவர் சோலை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 13 சிலைகளுமாக மொத்தம் 69 சிலைகள் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இந்த சிலைகள் வரும் 24ம் தேதி கூடலூர் நகரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இரும்பு பாலம் ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

அனைத்து சிலைகளும் கூடலூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டிய பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கூடலூர் நகர் வழியாக பழைய பேருந்து நிலையம், சுங்கம் ரவுண்டனா, தாலுகா அலுவலகம், காந்தி சிலை, துப்புக்குட்டி பேட்டை வழியாக கள்ளிக்கோட்டை சாலையில் உள்ள இரும்பு பாலம் ஆற்றில் கரைக்கப்படும். சிலைகள் பிரதி சிலை செய்யப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலை கரைப்பு நாளான 24ம் தேதியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பந்தலூர்: பந்தலூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொன்னானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா தேவாலா கால்நிலையத்திற்குட்பட்ட தேவாலா, பந்தலூர், உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் சேரம்பாடி, எருமாடு, அம்பலமூலா, நெலாக்கோட்டை உள்ளிட்ட காவல்நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் 79 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் 24ம் தேதி அனைத்து பகுதிகளில் இருந்து ஊர்வலமாக பந்தலூர் எடுத்து வரப்பட்டு பந்தலூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பொன்னானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்மந்தம் மற்றும் அமுதா உள்ளிட்ட போலீசார் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கூடலூர், பந்தலூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை appeared first on Dinakaran.

Related Stories: