மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள் குமரி திரும்பினர்

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த 7 மீனவர்கள், பாண்டிச்சேரி, கடலூரை சேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என 12 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது இழுவை கப்பல் மோதி அவர்களின் விசைப்படகு மூழ்கியது. 12 பேரையும் இழுவை கப்பலை சேர்ந்தவர்கள் மீட்டு மாலத்தீவில் கரை சேர்த்தனர். அவர்களை விசாரணை கைதிகளாக மாலத்தீவு துறைமுக சென்டரில் வைத்திருந்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை மீட்டு, நேற்று முன்தினம் விமானங்கள் மூலம் இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அதன் பின் சொந்த ஊர் வந்தனர்.

The post மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள் குமரி திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: