மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை துவக்கம்

ராமநாதபுரம், செப்.15: ராமநாதபுரத்தில் 2023-2024ம் கல்வி ஆண்டு முதல் ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் துவங்கப்பட உள்ளது. 2023-24ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர்,மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி www.tncuicm.com மூலம் மட்டும் 13.9.2023 முதல் 22.9.2023 வரை பெறப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.9.2023 பிற்பகல் 5 மணி வரை, மாணவர் சேர்க்கைக்கான குறைந்த பட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.8.2023 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (முழு நேரம்), பயிற்சி காலம் ஓராண்டு (2 பருவ முறைகள்) மற்றும் கட்டணம் ரூ.18,850 ஆகும். மேலும் தகவல் அறிந்து கொள்ள www.tncuicm.com அல்லது கூடுதல் விபரங்களுக்கு மேலாண்மை நிலைய முதல்வர் (பொறுப்பு) அலைபேசி எண் 97867 50554 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இதனை மண்டல இணைப்பதிவாளர் சு.முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

The post மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: