இதன்படி நேற்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11ம்தேதி ரயிலில் பயணம் செய்யலாம். இன்று முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 12ம் தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஐந்தே நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்தது.
குறிப்பாக பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. காலை 8 மணி முதலே ஏராளமானோர் முன்பதிவு செய்ததால் அனைத்து டிக்கெட்டுகளின் ரிசர்வேஷன் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. பலர் அதிகாலை 5 மணியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்து முன்பதிவு செய்தனர். ஆனால் இணையதளத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்ததால் டிக்கெட் கவுன்ட்டர்களில் காத்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர். ஏற்கனவே நவ.12ம் தேதி வரும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன் பதிவு கடந்த ஜூலை மாதம் துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் பண்டிகைக்காக 2ம் நாளாக முன்பதிவு.. ஐந்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்: தென்மாவட்ட பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.
