ஜி20 உச்சி மாநாடு இந்தியாவை புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா

வாஷிங்டன்: ஜி 20 உச்சி மாநாட்டை நடத்தியதற்காக இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா, ‘இது ஒரு மிகப்பெரிய வெற்றி’ என்றும், ‘இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா இடையேயான புதிய பொருளாதார பாதை புதிய சகாப்தம் என்றும் பாராட்டி உள்ளது. வாஷிங்டனில், அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘டெல்லியில் நடத்த ஜி 20 மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்தது. மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இந்த மாநாட்டில், இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மைல்கல். இது ஐரோப்பா, ஆசியா இடையேயான இணைப்பில் புதிய சகாப்தம் படைக்கும். மேலும், இரு கண்டங்களுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா அதிபர்கள் பங்கேற்காதது குறித்து நான் கருத்து கூற முடியாது. ஜி 20ல் பலதரப்பட்ட பார்வை கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளித்து, அக்கொள்கைகளை மீறக்கூடாது என்கிற பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா போருக்கு மத்தியில் இது மிக முக்கியமான அறிக்கையாக நாங்கள் கருதுகிறோம்’’ என்றார்.

The post ஜி20 உச்சி மாநாடு இந்தியாவை புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: