அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 22ம் ஆண்டு அஞ்சலி

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 2001 செப்.11 அன்று நியுயார்க் வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள், பென்டகன் தற்கொலைப் படை மூலம் விமானம் மோத வைத்து தாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ம் தேதி வந்துவிட்டால் அமெரிக்க மக்கள் அந்த இடங்களுக்கு சென்று தாக்குதலால் இறந்தவர்களுக்கு அமெரிக்க தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அலாஸ்காவில் உள்ள ராணுவ தளத்திலும், அவரது மனைவி ஜில் பிடன் பென்டகனிலும், துணை பிரதமர் கமலா ஹாரிஸ் வர்த்தக மையத்திலும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

The post அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 22ம் ஆண்டு அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: