பந்தலூர், செப்.11: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஈஷா ஆரோக்கிய அலை, சோலா குழுமம், நீலகிரி சேவா கேந்திரம், சிறியூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். இம்முகாமிற்கு ஈஷா தன்னார்வலர் கோமதி தலைமை தாங்கினார். சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கண்ணதாசன், சுரேஷ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா, சேரம்பாடி வியாபாரிகள் சங்க செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சரஸ்வதி மகா வித்யாலயா பள்ளி தாளாளர் மனோஜ்குமார், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நீலகிரி சேவா கேந்திர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வியாபாரிகள் சங்க தலைவர் ரவி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை கண் மருத்துவர் ருகேல், தலைமையில் மருத்துவ குழுவினர் கண் சிகிச்சை அளித்தனர்.
ஈஷா குழும பொது மருத்துவர் மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பல்வேறு பொது மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்கு 20-க்கு மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
The post சேரம்பாடியில் அரசு பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.