பிஏபி 4-ம் மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் விட எதிர்ப்பு

 

உடுமலை, செப்.11: பிஏபி 4-ம் மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் விட எதிர்ப்பு தெரிவித்து கோட்டமங்கலத்தில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி 4-ம் மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் விட, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நடந்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கோட்டமங்கலத்தில் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

4-ம் மண்டலத்துக்கு மூன்று சுற்றுக்கு பதிலாக ஒரு சுற்று தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டதை ஏற்க முடியாது. ஆயக்கட்டில் 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என்ற நிலை மாறி, மூன்று நாள் திறப்பு, 20 நாள் அடைப்பு என மாறிப்போனதற்கு யார் காரணம்? திருமூர்த்தி அணைக்கு 1150 கனஅடி தண்ணீர் எடுப்பதில் என்ன தடை உள்ளது? பிஏபி பாசன தண்ணீரை வணிக பயன்பாட்டுக்கு திருப்புவதை தடுக்க வேண்டும். தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்.இதை வலியுறுத்தி வரும் 14-ம் தேதி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என பிஏபி விவசாயிகள் நல சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post பிஏபி 4-ம் மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் விட எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: