அதன் பிறகு மீண்டும் கூடுதலாக 450 கன அடி உயர்த்தி 2,450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 1 தேதி முதல் ஜூலை மாதம் 15ம் தேதி வரை தமிழகத்திற்கு 2,000 மில்லியன் கன அடி, அதாவது 2 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. கடந்த வாரம் முதல் கண்டலேறு அணையில் 950 கன அடியாக தண்ணீர் குறைத்து திறக்கப்பட்டது, மழை பெய்ததால் ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ன்டில் கூடுதலாக தண்ணீர் வந்தது. மேலும் தற்போது தமிழக எல்லையில் 312 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகத்திற்கு 3 டிஎம்சி நீர் கண்டலேறு அணையில் இருந்து கிடைத்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 3 டிஎம்சி நீர் appeared first on Dinakaran.
