ஊட்டியில் தொடர் மழை குளிரால் மக்கள் அவதி

ஊட்டி:ஊட்டியில் நேற்றும் சாரல் மழை பெய்ததால் குளிர் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டியில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல், சாரல் மழை பெய்தது. ஊட்டி நகரில் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், குளிர் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர். சாரல் மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.அதேசமயம், மழை பெய்யத் துவங்கியுள்ளதால், ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் அனைத்திலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது.

The post ஊட்டியில் தொடர் மழை குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: