முதல்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்படும் பயண அட்டைகளை இணையவழியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசதியை சென்னை தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கிவைத்தார். இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; சென்னை மாநகரில் முதற்கட்டமாக 100 மின் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில மாதங்களில் 4,000 புதிய பேருந்துகள் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். உடல் பருமனாக உள்ளவர்களும் பயணிக்க ஏதுவாக பேருந்துகளில் சீட் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
The post சென்னை மாநகரில் முதற்கட்டமாக 100 மின் பேருந்துகளை இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.
