டெபிட் கார்டு வேண்டாம் செல்போன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய வசதி: கியூஆர் ஸ்கேன் செய்தால் போதும்

புதுடெல்லி: டெபிட் கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய வசதியை யுபிஐ அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் யு.பி.ஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச பின்டெக் பெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது ‘‘யு.பி.ஐ. ஏ.டி.எம்.” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும். அந்த ஏடிஎம்மில் கார்டு இல்லாத சேவை என்று வரும் பட்டனை அழுத்தினால், எவ்வளவு தொகை என்று வருகிறது. அதில் நமக்கு தேவைப்படும் தொகையை அழுத்தினால், கியூஆர் கோடு வருகிறது. அந்த நேரத்தில் நமது செல்போனில் உள்ள யுபிஐ ஆப் மூலம் அதை ஸ்கேன் செய்தால், அதன் மூலமாக ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி உள்ளன.

The post டெபிட் கார்டு வேண்டாம் செல்போன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய வசதி: கியூஆர் ஸ்கேன் செய்தால் போதும் appeared first on Dinakaran.

Related Stories: