இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு தயார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டி


லாகூர்: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிந்து சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றில் லாகூரில் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 38.4 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64, கேப்டன் ஷாகிப் அல்ஹசன் 523 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பவுலிங்கில் ஹரீஸ் ரவூப் 4, நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில், இமாம் உல்ஹக் 78, பக்தர் ஜமான் 20, கேப்டன் பாபர் அசாம் 17 ரன் எடுத்து அவுட்டாக முகமது ரிஸ்வான் நாட்அவுட்டாக 63ரன் எடுத்தார். 39.3 ஓவரில் 194 ரன் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரீஸ் ரவூப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது: அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அணியின் எல்லா வீரர்களுக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். இதற்கு அடுத்து பந்துவீச வரும் ஹாரிஸ் ரவுப் நன்றாக பந்து வீசுகிறார். இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருப்பதை பார்த்தோம். அதன் காரணமாக பகீம் நன்றாக பந்து வீசுவதையும் பார்த்தேன். ஆடுகளத்தில் கொஞ்சம் புல் இருந்ததால் இவரை இந்த ஆட்டத்தில் சேர்க்க நினைத்தோம். இங்கு நாங்கள் விளையாடும்போது எப்பொழுதும் கூட்டம் எங்களை அதிக அளவில் ஆதரிக்கிறது. அவர்கள் அனைவரும் இந்த போட்டியை ரசித்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தியாவுடன் விளையாடும்போது இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை தரும்.

பிரஷர் எதுவும் கிடையாது. நாங்கள் எப்பொழுதும் பெரிய போட்டிக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய 100 சதவீதத்தை வெளிப்படுத்துவோம்” என்றார். ஆசிய கோப்பை தொடரில் எஞ்சிய அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடைபெற உள்ளது. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். நாளை மறுநாள் (9ம்தேதி) இலங்கை-வங்கதேசம் மோதுகிறது.

The post இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு தயார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: