வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி: அதிகாலை முதலே திரளும் மக்கள்


நாகை: புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனியை ஒட்டி அதிகாலை முதலே அங்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றன. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் நிகழ்ச்சியான தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது. தேர் மற்றும் சப்பரங்கள் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கைஜரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும்.

தேர்பவனியில் கலந்து கொல்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றன. இதனால் கடற்கரை கடைவீதிகள் என்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர். நாளை மாலை அன்னையின் திருகொடி இரக்கப்பட்டு பேராலய ஆண்டு பெருவிழா நிறைவடையும் இதனை ஒட்டி நாளைய தினம் வேளாங்கண்ணியிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி பேராலயத்திலும் இன்று மாலை பெரிய தேர்பவனி நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி: அதிகாலை முதலே திரளும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: