பாலக்காடு அருகே தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய சம்பவத்தில் 3 பேர் கைது

பாலக்காடு, செப்.7: பாலக்காடு அருகே சந்திரநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம் குப்பியோட்டை சேர்ந்த வேணுகோபால் என்பவரின் தனியார் நிறுவனம் சந்திரநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ஓணம் பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்பட்டது.

அப்போது நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்து 3 மோட்டார்கள், கிரைன்டிங் மெஷின், சில்வர் சீட்டுகள், பல்வேறு வகையான உபகரணங்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். தொடர்ந்தவர்கள் தமிழகத்தில் விற்பனை நடத்தியுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, புதுசேரி கசபா போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பாலக்காடு கல்லேப்பிள்ளியைச் சேர்ந்த ராஜேஷ் (35), மருதரோட்டைச் சேர்ந்த ஷபீக் (36), சுரேந்திரன் (56) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

The post பாலக்காடு அருகே தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய சம்பவத்தில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: