வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டம்: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

நிலக்கோட்டை, செப். 6: வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நிலக்கோட்டை பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கொடிமுருகு, துணைத்தலைவர் எஸ்பி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சடகோபி வரவேற்றார். கூட்டத்தில் திமுக பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான ஜோசப் கோவில்பிள்ளை, ஏழை எளிய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி நூறு சதவீதம் கல்வியை பெறும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்பி.முருகேசன் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், கலைஞரின் பெயரில் வழங்கப்படும் உயரிய விருதான கலைஞர் விருதை இந்தாண்டு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அறிவித்துள்ள திமுக தலைவருக்கும், நன்றி தெரிவித்துக் தீர்மானம் கொண்டு வந்தனர். அனைத்து தீர்மானங்களும் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவில் ஏகமனதாக நிறைவேற்றி நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலம்புசெல்வன்,செந்தில்குமார், முத்து உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக இளநிலை உதவியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டம்: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: