சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய சமையல் கூடம்

தோகைமலை. செப். 6: கடவூர் தாலுகா தரகம்பட்டி அருகே உள்ள காளயாப்பட்டி ஊராட்சி சின்னான்டிப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டிடம் மற்றும் சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய சமையல் அறை கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரியிடம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்பேரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காளயாப்பட்டி ஊராட்சி சின்னான்டிப்பட்டியில் புதிய நிழற்குடை கட்டிடம் அமைக்க ரூ8.30 லட்சம் மதிப்பீட்டிலும், கீழப்பகுதி ஊராட்சி சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய சமையலறை கூடம் அமைக்கும் பணிக்கு ரூ.5.86 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகளை தொடங்குவதற்கு கடந்த 9.3.2023 அன்று பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த பணிகள் இரண்டும் முடிக்கப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. காளையாபட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியமேரி மாியலூயிஸ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் எம்எல்ஏ சிவகாமசுந்தரி புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.கீழப்பகுதி ஊராட்சி சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கீழப்பகுதி புல்லட் ஷாஜஹான் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் தரகம்பட்டி கோமதிபிரபாகரன், கிருஷ்ணகுமாரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் எம்எல்ஏ சிவகாமசுந்தரி புதிய சமையலறை கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

The post சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய சமையல் கூடம் appeared first on Dinakaran.

Related Stories: