பந்தலூர் அருகே கூண்டில் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை

 

பந்தலூர், செப். 4: பந்தலூர் வட்டம் சேரங்கோடு அருகே படச்சேரி கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறு-குறு விவசாயிகள் மற்றும் டேன் டீ தேயிலைத்தோட்டம் நிறைந்த பகுதியில் சமீபத்தில் சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குடியிருப்பு அருகே உள்ள தேயிலைத்தோட்டங்களில் பதுங்கி இருக்கும் சிறுத்தைகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

நேற்று மாலை படச்சேரி பகுதியில் வசித்து வரும் விவசாயி தேவதாஸ் என்பவரது வீட்டின் அருகே இருந்த கோழிக்கூண்டில் புகுந்து வளர்ப்பு கோழியை பிடித்தது. அதனை பார்த்த அவரது தம்பி மகள் சத்தம் போடவே சிறுத்தை வாயில் கவ்விய கோழியை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டில் இருந்த கோழியை சிறுத்தை பிடித்தது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே கூண்டில் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை appeared first on Dinakaran.

Related Stories: