கூடலூரில் ஆதார் அட்டை திருத்தங்களுக்கு அலைக்கழிப்பு

கூடலூர், செப்.3: கூடலூரில் ஆதார் அட்டை திருத்தங்களுக்கு அலைக்கழிப்படுவதாக அதிமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரன் கூடலூர் கோட்டாட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
‘‘பல்வேறு காரணங்களுக்காக ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். அப்போது தேவைப்படும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக கூடலூர் சுற்று வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடலூர் நகருக்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து செலவு, வேலை மற்றும் வருமான இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ஒரே முறையில் சரியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால் மீண்டும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து ஆதார் திருத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post கூடலூரில் ஆதார் அட்டை திருத்தங்களுக்கு அலைக்கழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: