காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் மற்றும் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்கத்தினர் இணைந்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் கே.பி. ரமணன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் சர்வேசன், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் பி.ஆர். ஹரிஹரன், மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மத்திய வங்கி ஊழியர்களுக்கும், நகர வங்கி ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மாநில வங்கி, மத்திய வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்கிட வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூப்புநிலை பட்டியல் வெளியிட வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தை கல்வி சலுகையாக தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிவப்பிரகாசம் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: