அமெரிக்க அதிபரானால் மஸ்க் பாணியில் ஆட்சி செய்வேன்: விவேக் ராமசாமி தடாலடி

வாஷிங்டன்: ‘அமெரிக்க அதிபராக தேர்வானால், எலான் மஸ்க் பாணியில் ஆட்சி செய்வேன்’ என குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருக்கும் விவேக் ராமசாமி கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு அடுத்ததாக இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் அதிபரானால் எனது நிர்வாக ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அவர்தான் எனக்கான சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில், டிவிட்டரை வாங்கியதும் மஸ்க் 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். அதன் பிறகுதான் அந்நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்தது. நான் அதிபரானால், மஸ்க் பாணியிலேயே ஆட்சி செய்வேன்’’ என்றார்.

The post அமெரிக்க அதிபரானால் மஸ்க் பாணியில் ஆட்சி செய்வேன்: விவேக் ராமசாமி தடாலடி appeared first on Dinakaran.

Related Stories: