தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவராக ரெ.தங்கம் மீண்டும் தேர்வு: சென்னை பொதுக்குழுவில் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பொதுக்குழுவில் மாநில தலைவராக ரெ.தங்கம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர்-வழக்கறிஞர் எஸ்.சரவணகுமார், பொருளாளர்-டாக்டர் எஸ்.நஜிம், துணை பொதுச்செயலாளர்கள்- இளங்கோவன், ஆர்.சீனிவாசன், ஆசிரியர் எம்.காந்தி, ஆர்.கோகுல கண்ணன், மாநில தகவல் தொடர்பு செயலாளர்-வண்ணை ஜெ.துரைபாபு, பா.நாகராஜன், என்.ரவிச்சந்திரன், எஸ்.கோதண்டராமன், யோஷ்வா, மகளிர் அணி செயலாளர்-வெண்ணிலா, துணை செயலாளர்-புதுக்கோட்டை வெ.மலர்விழி, மக்கள் தொடர்பு அலுவலர்-பா.சக்திவேல், பட்டுக்கோட்டை வீர.சரவணன், பூங்கோடி இரா.கோவிந்தராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பொதுக்குழுவில் வேளச்சேரி க.பத்மநாபன், வழக்கறிஞர் ஜான் பாட்ஷா, தமிழ்நாடு மின்சாரத்துறை சங்க தலைவர் பி.கோட்டீஸ்வரன், ராணிப்பேட்டை ரேவதி சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் மாவட்டந்தோறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை நடத்துவது. திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி வழங்கி வருவதுடன், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை பல்வேறு கல்வி உதவி தொகையை 2 மடங்கு, விடுதி உணவு கட்டணம் 2 மடங்கு, விபத்து இறப்பு நிவாரணம் 2 மடங்கு (ரூ.2 லட்சம்), விபத்து நிவாரண தொகை ரூ.25,000லிருந்து ரூ.50,000 என 2 மடங்காக உயர்த்தி வழங்கியது. ஐஐடி மாணவர்களுக்கு உதவி தொகை 2 மடங்கு உயர்த்தி வழங்கி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவராக ரெ.தங்கம் மீண்டும் தேர்வு: சென்னை பொதுக்குழுவில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: