பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கலெக்டர் ஆய்வு

*மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவு

பாலக்காடு : முதலமடை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியை மாவட்ட கலெக்டர் சித்ரா நேரில் ஆய்வு செய்தார்.
பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா கொல்லங்கோடு பிளாக்கில் முதலமடை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியை மாவட்ட கலெக்டர் சித்ரா நேரில் ஆய்வு செய்தார்.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதின் முக்கியத்துவம் குறித்தும், தேர்தல் நேரங்களில் வாக்களிப்பது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, புகைப்படம் ஆகியவை வாக்குச்சாவடி அதிகாரிகள் முன்பாக சமர்ப்பித்து பெயர் சேர்த்து கொள்ளலாம்.
சித்தூர் தாலுகா அலுவலகத்தில் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து பரம்பிக்குளம் மக்களின் முக்கிய கோரிக்கையான தேக்கடி-செம்ணாம்பதி வனப்பாதையை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் பரம்பிக்குளம் வாழ் மக்களின் அடிப்படை வசதிகள், சோலார் விளக்குகள், குடிநீர் வசதி ஆகியவற்றை வழங்க உரிய அதிகாரிகளிடம் உத்தரவுவிட்டார். இந்த நிகழ்வில் துணை கலெக்டர் சுனில்குமார், வருவாய் மண்டல அதிகாரி அமிர்த வல்லி, சித்தூர் தாசில்தார் முகமது ராபி, மாவட்ட தேர்தல் துணை அதிகாரி டோம்ஸ் ஆகியோர் இருந்தனர்.

The post பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: