குருவாயூர் கோயிலில் இல்லம் நிறை திருவிழா விமரிசை

 

பாலக்காடு, ஆக. 22: குருவாயூர் கோவிலில் இல்லம்நிறை திருவிழா நிகழ்ச்சி விமரிசையாக நேற்று நடைபெற்றது. குருவாயூர் கோவிலில் ஆண்டுந்தோறும் இல்லம்நிறை நிகழ்ச்சி ஆவணிமாதம் முதல் திங்கட்கிழமை நடைபெறும். அதன்படி இந்தாண்டு இல்லம்நிறை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதல் அறுவடை செய்த நெற்கதிர்கள் குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

நேற்று காலை 6 மணிமுதல் 9 மணிவரையிலாக சுபமூகூர்த்தத்தில் இந்த நிகழ்ச்சி கோவில் தந்திரி தினேஷன் நம்பூதிரிப்பாட் தலைமையில் நடைபெற்றது. கோவில் சுற்றுப்பிரகாரத்தில் கொடிமரத்தின் கீழ் மாக்கோலம் அமைத்து நெற்கதிர்கள் கீழ் சாந்தியினர் தலைச்சுமையாக ஏற்றிவந்து குவித்து வைத்து விஷேச பூஜைகள் கோவில் மேல்சாந்தி தோட்டம் சிவகரன் நம்பூதிரிப்பாட் முன்னிலையில் இல்லம்நிறை – மகாலட்சுமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டனர். தேவஸ்தான சேர்மன் டாக்டர். வி.கே.விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்களான மனோஜ், கோபிநாத், மனோஜ் பி.நாயர், ரவீந்தரன், நிர்வாகி விநயன், துணை நிர்வாகி மனோஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

The post குருவாயூர் கோயிலில் இல்லம் நிறை திருவிழா விமரிசை appeared first on Dinakaran.

Related Stories: