யாதவர் எழுச்சி மாநாடு கால்கோள் விழா

மதுரை, ஆக. 20: தமிழ்நாடு யாதவ மகாசபையின் சார்பில் நடைபெறும் யாதவர் எழுச்சி மாநாட்டிற்கான கால்கோள் விழா, நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டம், சிறுகனூரில் செப்டம்பர் மாதம் 2ம் தேதி தமிழ்நாடு யாதவ மகாசபையின் சார்பில் யாதவர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான கால்கோள் விழா நேற்று காலை வீரன் அழகுமுத்துக்கோன் மாநாட்டு திடலில் நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வேலு மனோகரன், மாநில பொருளாளர் கே.எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாநில நிர்வாகிகள், மகளிர் அணி செயலாளர் டாக்டர் எம்.முத்துலட்சுமி, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பொட்டல் எஸ்.துரை, எம்.ஆர்.பன்னீர்செல்வம், எம்.கே.ஆர்.மெய்யப்பன், வழக்கறிஞர் கே.சபாபதி, என்.எஸ்.சேதுமாதவன், எம்.தனுஷ்கோடி, ஓ.எம்.பி.ராமதாஸ், வியாசை எஸ்.செல்வன், எஸ்.அடைக்கலம், என்.முத்தையா, டி.கருணாநிதி, ஆர்.வி.கருணாநிதி, டி.கே.ஜி.கண்ணன், ஏ.அண்ணாமலை, எஸ்.வி.ஜே.கோகுலகிருஷ்ணன், ஆர்.ஆர்.உதயகுமார், எல்.எஸ்.பாலாஜி, மாவட்டத் தலைவர்கள் தங்கராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி தமிழ்ச்செல்வன் மற்றும் தர் ஆகியோர் செய்திருந்தனர்.

The post யாதவர் எழுச்சி மாநாடு கால்கோள் விழா appeared first on Dinakaran.

Related Stories: