இவரது போலி சோதனைக்கு அமெரிக்க அரசு சார்பில் தேசிய சுகாதார காப்பீடு திட்ட நிறுவனம் மட்டும் ரூ.1500 கோடி செலுத்தி உள்ளது. பெரும்பாலும் இவர் நோயாளிகளிடம் தேவையில்லாமல் புற்றுநோய் மரபணு சோதனை நடத்தி உள்ளார். இதன் மூலம் அவர் நோயாளிகள் தரப்பில் இருந்து அதிக கட்டணம் பெற்றுள்ளார். இதை மறைக்க தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அமெரிக்க மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து தனிப்பட்ட முறையில் அவர் ரூ.200 கோடியும் பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் மினால் படேலுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி சொத்து பறிமுதல் விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
The post மரபணு சோதனை மூலம் அமெரிக்காவில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி இந்திய வம்சாவளிக்கு 27 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
