கடமலைக்குண்டுவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வருசநாடு, ஆக. 19: கடமலைக்குண்டு கிராமத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடமலைக்குண்டு வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினர். பின்னர் விவசாயிகள் தங்களது விவசாயம் தொடர்பான புகார் மற்றும் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் அளித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார் – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராம பொதுமக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்க வேண்டும். மேலும் வனத்துறையினர் சிறப்பு கூட்டங்கள் நடத்தி வன உரிமை சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பெரியகுளம் பகுதியில் உள்ள ஜெயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சிலர் தொடர்ந்து விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை திருடி வருகின்றனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். சமூக ஆர்வலர் அங்குசாமி – கண்டனூர் அருகே உள்ள புதுக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை தூர்வார வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். முத்தாலம்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி தேனி மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச்சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்கள்.

The post கடமலைக்குண்டுவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: