பிரியங்காவுடன் அகிலேஷ் யாதவ் ஒரே விமானத்தில் திடீர் பயணம்: உபி. தேர்தலுக்கு கூட்டணி பற்றி பேச்சா?

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்கான தொகுதி பங்கீடும் விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெய்ந்த் சவுத்ரி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியுடன்  சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான தனி விமானத்தில் ஒன்றாக பயணம்  செய்துள்ளார். மேலும், விமான நிலையத்தில் சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவும் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிறன்று பிரியங்கா காந்தி கோரக்பூரில் பிரதிக்யா பேரணியில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்வதற்காக லக்னோ விமான நிலையம் வந்தார். அதே நேரத்தில் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெய்ந்த் சவுத்ரியும் டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அப்போது பிரியங்கா காந்தி, ஜெயந்த் சவுத்ரியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். தன்னுடைய விமானத்தில் வருமாறு அழைப்பு விடுத்தார். இதற்கு முதலில் ஜெய்ந்த் சவுத்ரி தயங்கினார்.பின்னர் அவரது விமானம் தாமதமானதால் தன்னுடன் வந்த மேலும் 2 ஆர்எல்டி தலைவர்களுடன் பிரியங்கா சென்ற விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக ஆர்எல்டி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாடிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இது போன்று நடக்கவில்லை. இது, எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம். நான் 5.15 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றேன். அப்போது, காத்திருப்போர் அறையில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் இருந்தார். மூன்று தலைவர்களும் சந்தித்தார்களா? என்று என்னால் கூற முடியாது,” என்றார்….

The post பிரியங்காவுடன் அகிலேஷ் யாதவ் ஒரே விமானத்தில் திடீர் பயணம்: உபி. தேர்தலுக்கு கூட்டணி பற்றி பேச்சா? appeared first on Dinakaran.

Related Stories: