ரேக்ளா ரேஸ் பந்தயவீரர் கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திருச்சி, ஆக.15: குதிரை பந்தய வீரர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது. திருச்சி போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சாித்திரபதிவேடு குற்றவாளிகள், கொலை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி கடந்த மே 26ம் தேதி உறையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட டாக்கா் சாலையிலுள்ள மைசூர் கபே அருகே குதிரை ரேக்ளா ரேஸில் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக குதிரை பந்தய வீரா் சண்முகம் (23) என்பவரை ஆபாசமாக திட்டியும், அரிவாள் மற்றும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் தலைமறைவாகினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலை சம்பவத்தில் தொடா்புடைய திருச்சி மிளகுபாறை செல்வநகரை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) கோபால் (30) மற்றும் தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சோ்ந்த ஹாிபிரசாத் (எ) மாஸ்ஹாி (23) ஆகியோர் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளான கோபாலகிருஷ்ணன் (எ) கோபால் மற்றும் ஹாிபிரசாத் (எ) மாஸ் ஹாி ஆகியோரின் கொலை உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உறையூர் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையை பாிசீலனை செய்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கோபால் மற்றும் மாஸ் ஹரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், அதற்கான ஆணையை குற்றவாளிகளிடம் சார்வு செய்தனர். இவ்வழக்கில் தொடா்புடைய விஜி மற்றும் அபிஷேக் ஆகியோர் மீது கடந்த ஜூலை.29ம் தேதியே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி மாநகாில் இது போன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கடும் எச்சாிக்கை விடுத்துள்ளார்.

The post ரேக்ளா ரேஸ் பந்தயவீரர் கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: