சுதந்திர தின சிறப்பு கிராம சபைக்கூட்டம்

 

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் நாளை (15ம்தேதி) சுதந்திரதின கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில், சுதந்திர தின விழாவையொட்டி, சிறப்பு கிராம சபைக்கூட்டம் நாளை (15ம் தேதி) காலை 11 மணியளவில் நடத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் செய்து வருகிறார்கள். இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை (15ம் தேதி) 251 கிராம ஊராட்சியிலும் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.

இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) -சுகாதாரம் குறித்து விவாதித்தல் வேண்டும். கிராம சபை கூட்டத்தில் நாட்டின் சுதந்திரத்தில் பங்கு பெற்ற உள்ளூர், மாவட்ட, மாநில சுதந்திர போராட்ட தியாகிகளின் பங்களிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூற வேண்டும். இதர பொருட்கள் ஏதேனும் இருப்பின், கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம் என 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திர தின சிறப்பு கிராம சபைக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: