புதிய நீதி சட்டம் மூலம் 90 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கலாம்: கபில் சிபல் விமர்சனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ‘பாரதிய நியாய சன்ஹிதா’ காவல்துறையை தவறாக பயன்படுத்த வழி செய்யும் என கபில் சிபல் விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக 3 புதிய சட்டங்களை நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்தது. இதில் இந்திய தண்டனை சட்டத்துக்கு(ஐபிசி) பதில் ‘பாரதிய நியாய சன்ஹிதா’ – பாரதிய நீதி சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பதிவில், “அரசியல் நோக்கங்களுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்த பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் வழி செய்கிறது. தேசத்தின் பாதுகாப்புக்காக எந்த சூழலில் ஒருவர் மீது வழக்கு தொடரலாம் என்பது புதிய பாரதிய நியாய சன்ஹிதாவில் வரையறை செய்யப்படவில்லை. இது காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுத்து எதிரிகளை அடக்கும் முயற்சி. குற்றம்சாட்டப்படுபவர்கள் 15 முதல் 60 அல்லது 90 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்க புதிய சட்டம் வழி செய்கிறது. இது பேரழிவை ஏற்படுத்துவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

The post புதிய நீதி சட்டம் மூலம் 90 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கலாம்: கபில் சிபல் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: