முத்துப்பேட்டையில் போதை விழிப்புணர்வு மனித சங்கிலி

 

முத்துப்பேட்டை, ஆக. 12: முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் அணிவகுப்பு மனித சங்கிலி நடைபெற்றது. இதற்கு டிஎஸ்பி விவேகானந்தன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாணவ. மாணவிகள் காவல் நிலையத்திலிருந்து பேரணியாக பழைய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து குமரன் பஜார், மன்னார்குடி சாலை வரை நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்று போதை பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் வர்த்தகக் சங்க தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர் வள்ளிவேலன், வர்த்தகக் கழக தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், பொருளாளர் கிஷோர், வழக்கறிஞர் தீன் முகமது, ரோட்டரி சங்க பொருளாளர் பகுருதீன், சப்இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு அமைப்பினர் காவல்துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் போதை விழிப்புணர்வு மனித சங்கிலி appeared first on Dinakaran.

Related Stories: