போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு இளைஞர் காங். 53-வது ஆண்டு விழா

கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், வெள்ளையனே வெளியேறு தினம் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் 53-வது ஆண்டு துவக்க விழா கோவை ஆலாந்துறையில் நேற்று நடந்தது. கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும், கோவை மாநகராட்சி கவுன்சிலருமான நவீன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இளைஞர் காங்கிரஸ் கொடி ஏற்றிவைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையொட்டி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நவீன்குமார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதேபோல், ஆர்.எஸ்.புரம், பொன்னையராஜபுரம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட துணை தலைவர் கே.பி.எஸ்.கிருஷ்ணராஜ், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண்குமார், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சச்சிதானந்தமூர்த்தி, சர்க்கிள் தலைவர் இந்துராஜ், நவுபல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வி.ஜி.பி.நடராஜ், சக்தி சதீஷ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணகுமார், கோகுல், கோகுல்ராஜ், ரமேஷ்குமார், முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு இளைஞர் காங். 53-வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: