ஆளுநரின் தர்பார் ஹால் பாரதியார் மண்டபமாக மாறியது

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மகாகவி பாரதியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் சூட்டினார். மேலும் கல்வெட்டுடன் கூடிய பெயர் பலகையை திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை வந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குடியரசு தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, எ.வ.ேவலு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், மேயர் பிரியா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், மாநிலங்கள் அவை எம்பி இளையராஜா, தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, மற்றும் அரசுத் துறைச் செயலாளர்கள், டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உள்ளிட்ட அதிகாரிகள், பத்மவிருது பெற்ற வடிவேல்கோபால், பாரதியார் பேரன் அர்ஜூன் பாரதி, காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்கு நடந்தது. பாரதியார் எழுதிய பாருக்குள்ளே நல்ல நாடு பாடல் பாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர் பாரதியார் பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் பாரதியின் சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா என்ற பாடலை வாசித்தனர். இந்த நிகழ்வில் நீலகிரி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 33 பழங்குடியினர் கலந்து ெகாண்டனர். பாரதியார் மண்டபம் என தர்பார் ஹாலுக்கு பெயர் சூட்டப்பட்டது காதில் தேன் வந்து பாய்வதாக பேராசிரியர் ஞானசம்பந்தன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா, வடிவேல்கோபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

The post ஆளுநரின் தர்பார் ஹால் பாரதியார் மண்டபமாக மாறியது appeared first on Dinakaran.

Related Stories: