சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி கம்பம் புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: தலைமைச் செயலகத்தில், இன்று “தேசிய கொடி கம்பம்“ புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்கள். இவ்வாய்வின்போது, தேசிய கொடிமரத்தினை புதுப்பித்தல் பணி ரூ.45.00 லட்சம் மதிப்பீட்டிலும், கொடிமர நடைமேடை மற்றும் பிணைகயிறு புதுப்பித்தல் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், கோட்டை கொத்தளத்தின் கூரை மராமத்துப்பணி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்கள்.

கொடிமரத்தின் விவரம்

முத்தமிழறிஞர் கலைஞர் , தீவிர முயற்சியால், 1974 முதல் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றலாம் என்ற உரிமை பெறப்பட்டது. 1687-1692 வரை, சென்னை மாகாண ஆங்கிலே ஆளுநராக இருந்த ‘யேல்‘ காலகட்டத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. மரக்கம்பம் பழுதடைந்ததால், 1994ல் 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் L & T நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது. கோட்டை கொத்தளத்தின் பீடத்திற்குமேல், கொடி கம்பம் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

கொடி கம்பம் முதல் அடுக்கு, 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது. கொடி கம்பம் இரண்டாம் அடுக்கு, 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.

கொடி கம்பம் மூன்றாம் அடுக்கு, 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன் இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர்.மேனகா, செயற்பொறியாளர். குழந்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி கம்பம் புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Related Stories: