நடிகை தீபிகா படுகோனின் ஆடையை பார்க்கும் பாஜக அமைச்சர்: காங்கிரஸ் மாணவர் சங்க நிர்வாகி குற்றச்சாட்டு

போபால்: நடிகை தீபிகா படுகோன் அணியும் ஆடையை பாஜக அமைச்சர் பார்ப்பதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி கன்னையா குமார் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மத்திய பிரதேச மாநில பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ‘ஆதிவாசி யுவ மகாபஞ்சாயத்’ நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர் கன்னையா குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, திரைப்படங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். திரைப்படங்களில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் எப்படி ஆடை அணிகிறார் என்பதையே பார்க்கிறார். மத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து கவலைபடுவதில்லை. மாநிலத்தின் உள்துறை அமைச்சரான அவர், முதலில் தனது சொந்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

பழங்குடியின மக்களின் அடிப்படை அடையாளத்தை மாற்றும் வகையில், அவர்களை வனவாசிகள் என்று வகைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காடுகளில் வசிப்பவர்களை வனவாசிகள் என்று கூறினால், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை பிளாட் வாசிகள் என்றுதான் அழைக்க வேண்டும்’ என்றார். முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்தில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி ஆடை அணிந்து கொண்டு ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வெளியான போது. அப்போது இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் மத்திய பிரதேசத்தில் பதான் திரைப்படம் ஒளிபரப்ப தடை விதிக்கப்படும் என்றும், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

The post நடிகை தீபிகா படுகோனின் ஆடையை பார்க்கும் பாஜக அமைச்சர்: காங்கிரஸ் மாணவர் சங்க நிர்வாகி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: