வரும் 1ம் தேதி திருமயம் தொகுதியில் கருத்து கேட்பு கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 30: திருமயம் தொகுதியில் கருத்து கேட்பு கூட்டம் வரும் 1ம்தேதி நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம், அறந்தாங்கி மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருத்துக்களை கேட்கும் பொருட்டு வருகின்ற 1ம்தேதி முதற்கட்டமாக திருமயம் தொகுதிக்குட்பட்ட பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் காலை 9 மணிக்கு பொன்னமராவதியிலும், காலை 10.30 மணிக்கு கொப்பனாப்பட்டி ஆகிய ஊர்களில் கருத்து கேட்பு நிகழ்வு நடைபெறும்.

இதேபோல் பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்தில் காலை 11.30 மணிக்கு காரையூர், பகல் 12.30 அரசமலையில் நடைபெறும். திருமயம் தெற்கு ஒன்றியத்தில் மாலை 3.30 மணிக்கு கோனாப்பட்டிலும், மாலை 4.30 மணிக்கு திருமயம்திலும் தி்ருமயம் வடக்கு ஒன்றியத்தில் மாரை 5.30 மணிக்கு ராங்கியமும், மாரை 6.30 மணிக்கு நச்சாந்துப்பட்டியிலும், நடைபெற உள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கழகத் தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. மேற்படி கூட்டத்தில் கழகத்தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வரும் 1ம் தேதி திருமயம் தொகுதியில் கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: