சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது: திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில், திமுக தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். கலைஞர் நூற்றாண்டை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட இளைஞர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது: திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: