எல்ஐசி.யின் ஜீவன் கிரண் பாலிசி அறிமுகம்: சேமிப்பு, ஆயுள் காப்பீட்டு திட்டம்

மும்பை: லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் ஜீவன் கிரண் பாலிசி நேற்று முன்தினம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்ஐசி.யின் ஜீவன் கிரண் என்ற புதிய பாலிசி தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டு திட்ட பாலிசி ஆகும். இதன் மூலம், மக்கள் தங்கள் வருங்கால வாழ்க்கை கட்டுமானத்தை பாதுகாப்புடன் அமைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 18 முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் உயர் பாதுகாப்பீட்டு பாதுகாப்பு, உயர் காப்பீட்டு தொகைக்கான உறுதியான சிறப்பு கட்டண சலுகைகள், ஒற்றை பிரீமியம் அல்லது சீரான தவணையில் பிரீமியங்கள், பங்குச்சந்தை சாராத, லாப பங்களிப்பற்ற, தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆக உள்ளது.

பாலிசியின் காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை ஆகியவை ஜீவன் கிரண் பாலிசியின் சிறப்பு அம்சங்களாகும். பாலிசிதாரர்கள் பாலிசியின் முதிர்வு காலம் வரை காப்பீட்டு பாதுகாப்பை பெற முடியும். மேலும், அதற்கு பின்பும், செலுத்திய பிரீமியத்தை திரும்ப பெறவும் முடியும். பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், ரெகுலர் பாலிசி செலுத்துபவர்களுக்கு வருடாந்திர பிரீமியம் அல்லது மொத்த பிரீமியம் தொகையில் 105% அன்றைய தேதி வரை வழங்கப்படும். சிங்கிள் பிரீமியம் பாலிசிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட அல்லது சிங்கிள் பாலிசி தொகையில் 125% வழங்கப்படும். ஜீவன் கிரண் பாலிசிகள் ஆன்லைனிலும் கிடைக்கிறது.

The post எல்ஐசி.யின் ஜீவன் கிரண் பாலிசி அறிமுகம்: சேமிப்பு, ஆயுள் காப்பீட்டு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: