மாநிலங்களவையில் ப.சிதம்பரம் குரலை உயர்த்திப் பேசியதாக தன்கர் அதிருப்தி: ப.சிதம்பரம் சரியாகவே பேசியதாக உறுப்பினர்கள் விளக்கம்

டெல்லி: மாநிலங்களவை மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பும் போது தம்மிடம் கடினமாக இடைப்பட்டார் என்று அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அதிருப்தி தெரிவித்தார். அதை மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த விளக்கம் அவையை சில நிமிடங்கள் கலகலப்பாக்கியது. விதி எண் 267-க்கு முன்பு 176 விதியின் கீழ் கொடுக்கப்பட்ட நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அனுமதித்தது ஏன் என்று காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

இதை குறிப்பிட்டு பேசிய மாநிலங்களவை ஜெகதீப் தன்கர் நீங்கள் இதை எப்படி செய்யலாம் என்று அதிகார தொனியில் ப.சிதம்பரம் கேட்டார் என்று குறிப்பிட்டார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் புகாருக்கு பதில் அளித்த மூத்த உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் தங்களை ப.சிதம்பரம் புகழ்ந்தே பேசியதாக விளக்கமளித்தார். ஜெகதீப் தன்கரின் புகாருக்கு விளக்கமளித்த மூத்த உறுப்பினர் ப.சிதம்பரம் தாம் சரியாக தமது கேள்வியை முன் வைத்ததாக விளக்கம் கொடுத்தார்.

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின்அதிருப்தி குறித்து மல்லிகா அர்ஜுன கார்கே பேசிய போது அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் என்று தன்கர் வலியுறுத்தினார். நீங்கள் எனது இதயத்தில் முதல் இடத்தில் உள்ளீர்கள் என்று கார்கேவை பார்த்து கூறிய போது, உங்களுக்கு பெரிய இதயம் இருப்பது உண்மை என்ற கார்கே, ஆனால் பாஜகவுக்கானது என்று கூறிய போது அவையில் சிரிப்பொலி எழுந்தது. ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா நீங்கள் எப்படி அதை செய்யலாம் என்று பணிவுடனே கேட்டார் என்றும் குரலின் தொனியை பார்ப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

The post மாநிலங்களவையில் ப.சிதம்பரம் குரலை உயர்த்திப் பேசியதாக தன்கர் அதிருப்தி: ப.சிதம்பரம் சரியாகவே பேசியதாக உறுப்பினர்கள் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: