தமிழ்நாடு விழா புகைப்பட கண்காட்சி

 

ஊட்டி,ஜூலை25: தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, ஊட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியினை, பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை மாதம் 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை கொண்டாடும் வகையில், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழ்நாடு நாள் முக்கியத்துவம் மற்றும் உழவா் நலன் காக்கும் அரசு, கல்வி மேம்பாடு தந்தையுமான முதல்வர், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும்,சோதனையிலும் சாதனை, கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மழை பாதிப்பு துயர் நீக்க நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்தும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த புகைப்படக் கண்காட்சியை நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் கண்டு ரசித்தனர். மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டு பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.

The post தமிழ்நாடு விழா புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: