ரூ.8 கோடியில் கட்டப்பட்ட இருளர் வீடுகளை கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் குயில் குப்பம் பகுதி உள்ளது. இங்குள்ள குடிசை வீடுகளில் வசித்த இருளர் பழங்குடியினர் 63 பேருக்கு ரூ.8 கோடியில் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 1 பிரிட்ஜ், டிவி., பீரோ, குக்கர், மிக்சி, கிரைண்டர், கேஸ் அடுப்பு, பாய், மெத்தை, தலையணை, போர்வை, சமையல் பாத்திரங்கள், மின்விசிறி, மின் விளக்குகள் வழங்கப்படுகிறது. அபிராமி திரையரங்க உரிமையாளரும், மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். வருகிற 27ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சாலை வசதிகள், பணி நிறைவு பெற்ற வீடுகள், விழா மேடை அமையும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா சேகர், திமுக ஒன்றிய செயலாளர் சேகர், மானாம்பதி ஊராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ரூ.8 கோடியில் கட்டப்பட்ட இருளர் வீடுகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: