ஊட்டி வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சத்தில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

 

ஊட்டி, ஜூலை 24: ஊட்டி மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்க கூடிய பழங்குடியின மக்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லாததால் அவதியடைந்து வந்த நிலையில், குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் பங்கேற்று நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அதேபகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

இதனை மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி ஆகியோர் திறந்து வைத்தனர். மசினகுடி அருகே இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இதனை சுற்றிலும் சுற்று சுவர் கட்ட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் மாயார் பகுதியில் வசிக்க கூடிய இளைஞர்கள், மாணவர்கள் விளையாடுவதற்கு போதிய மைதானம் இல்லாமல் இருந்து வந்தது.

மைதான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அங்கு முட்புதர்கள் வளர்ந்து காணப்பட்ட மைதானத்தை சீரமைத்து தர வேண்டும் என கோாிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு முட்புதர்கள் அகற்றி தடுப்புசுவர் கட்டும் பணிகளையும் மாவட்ட ஊராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.

The post ஊட்டி வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சத்தில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: