டெல்லி ஏர்போர்ட்டில் ரூ11 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த 3 தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள், துருக்கி செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக சென்றனர். அவர்களிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 7 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 யூரோவும் இருந்தன. இவற்றின் மொத்த இந்திய மதிப்பு ரூ.10 கோடியே 60 லட்சம்.

இதையடுத்து, 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் ஒருவர் மைனர். இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இவ்வளவு பெரிய மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post டெல்லி ஏர்போர்ட்டில் ரூ11 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: